கோர விபத்தில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

கோர விபத்தில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கிய நண்பர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலேன்பிந்துனுவெவ-கெகிராவ பிரதான வீதியில் யக்கல்ல 22வது சந்தி பகுதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீட்டின் வாயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கலேன்பிந்துனுவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

கோர விபத்தில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு | Accident Kills Two Friends In Sri Lanka

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கலேன்பிந்துனுவெவ மஹரம்பேவ பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஜனக சம்பத் மற்றும் ஹேஷான் இஷார ஆகிய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.