
பிரியாணி ஆசைக்காட்டி விந்தணு தானம் ; ஏமாந்த யாசகர்கள்!
இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள கருத்தரித்தல் மையம் ஒன்றின் முறைகேடு வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கருத்தரித்தல் மையம் ரோட்டில் பிச்சை எடுப்பவர்களிடம் மது, பிரியாணி ஆசைக்காட்டி அவர்களிடமிருந்து விந்தணு பெற்றுள்ளனர்.
பெண்களிடம் கருமுட்டை தானத்திற்கு 25,000 ரூபா அளித்தும், ஆண்களிடம் விந்தணு தானத்திற்கு 4,000 ரூபா வரை வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கருத்தரித்தல் மையம் 2016 ஆம் ஆண்டு முதல் உரிமம் இன்றி செயல்பட்டு வந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.