இலங்கையில் வாகன இறக்குமதி சிக்கல் ; சர்வதேச விளைவுகள் ஏற்படும் என அச்சம்

இலங்கையில் வாகன இறக்குமதி சிக்கல் ; சர்வதேச விளைவுகள் ஏற்படும் என அச்சம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சுமார் ஆயிரம் BYD ATTO 3 Atto 3 கார்கள் விடுவிக்கப்படவில்லை என்பது குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது.

இருப்பினும், மேற்படி வாகனங்களின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் நிறுவனமானது, அதன் அனைத்து வாகனங்களும் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை CROSS BORDER கடன் கடிதங்களைத் திறப்பதன் மூலம் மீண்டும் ஏற்றுமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக திறைசேரியின் பிரதிச் செயலாளர் திலீப் சில்வா அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரிவித்தார்.

இலங்கையில் வாகன இறக்குமதி சிக்கல் ; சர்வதேச விளைவுகள் ஏற்படும் என அச்சம் | Vehicle Import Problem 1000 Byd Vehicles Stuck

CROSS BOARDER LC-களின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 வாகனங்கள் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் சுமார் ஆயிரம் BYD ATTO 3 கார்களை இலங்கை சுங்கப் பிரிவு தடுத்து வைத்துள்ளது.

இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ATTO 3 ரக கார்களின் இயந்திர சக்தி 100kW ஆக இறக்குமதி செய்யப்படுகிறது, ஆனால் மற்ற நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் அதே மாடல் வாகனங்களின் மோட்டார் சக்தி 150kW ஆக இருப்பதால் ஏற்பட்டுள்ள சிக்கல் சூழ்நிலையே இதற்குக் காரணம்.

100kW கார்களுக்கு குறைந்த சுங்க வரி வசூலிக்கப்படுகிறது, அதே நேரத்தில் 150kW கார்களுக்கு அனுமதி பெறும்போது அதிக சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.

இலங்கையில் வாகன இறக்குமதி சிக்கல் ; சர்வதேச விளைவுகள் ஏற்படும் என அச்சம் | Vehicle Import Problem 1000 Byd Vehicles Stuck

மேலும், இந்த BYD வாகன மாதிரிகள் தொடர்பான சமீபத்திய செய்திகள் குறித்து, இந்த வாகனங்களுக்கான நாட்டின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் CG ஆட்டோ தனியார் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனாவில் BYD-யிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் 100 kW மாடல்கள் என்பது பொதுமக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் சிங்கப்பூர் போன்ற சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் வாகன மாதிரிகள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களின் மோட்டார் சக்தி சீனாவில் உள்ள BYD இன் சோதனை அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், மேலும் ஒரு சுயாதீன நிறுவனத்தால் மேலும் சான்றளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டுயுள்ளது.