கோடிகளில் விற்பனை செய்யப்படும் வாசனை திரவியங்கள் பற்றி தெரியுமா....

கோடிகளில் விற்பனை செய்யப்படும் வாசனை திரவியங்கள் பற்றி தெரியுமா....

கோடிகளில் விற்பனை செய்யப்படும் உலகின் ஐந்து விலையுயர்ந்த வாசனை திரவியங்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாசனை திரவியங்களில் தங்கம், வைரம் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதனால் வாசனை திரவியங்கள் கோடிகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் முதலாவதாக லி மாண்ட் சர் மீசுர் (Le Monde Sur Mesure) என்ற வாசனை திரவியம் 1.8 மில்லியன் அமரிக்க டொலர் (151 கோடி இந்திய மதிப்பு) ஆகும். இதில் 2 கிலோ தங்கம் மற்றும் 1,000 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரண்டாவதாக சுமுக் (Shumukh) இருக்கின்றது. இதன் விலை 1.3 மில்லியன் அமரிக்க டொலர் (109.1 கோடி இந்திய மதிப்பு) ஆகும்.

கோடிகளில் விற்பனை செய்யப்படும் வாசனை திரவியங்கள் பற்றி தெரியுமா.... | World S 5 Most Expensive Perfumes Name Listஇதில் 18 கரட் தங்கம், 5 கிலோ தூய வெள்ளி, 3,571 வைரங்கள் மற்றும் பெரிய முத்துக்கள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக டிகேஎன்வை கோல்டன் மில்லியன் டொலர் பெர்ஃயும் (DKNY Golden Million Dollar Parfum) என்ற வாசனை திரவியமாகும்.

இதில் நீள்வட்ட வடிவத்தில் வெட்டப்பட்ட ரூபி, பேரிக்காய் வடிவ ரோஜா - வைரம், கபோச்சோன் சஃபையர், பரைபா இரத்தினக்கல், 2,700 வெள்ளை நிற வைரங்கள், 15 இளஞ்சிவப்பு வைரங்கள் மற்றும் 183 மஞ்சள்-நீலக்கல் போன்றவை ஒளிர்கின்றன. இதன் மதிப்பு 1 மில்லியன் அமெரிக்க டொலர் (83.9 கோடி இந்திய மதிப்பு) ஆகும்.

அடுத்ததாக கிரீட் ரோயல் சேர்வீஸ் (Creed Royal Service) இதன் பெறுமதி 1 மில்லியன் அமெரிக்க டொலர் (83.9 கோடி இந்திய மதிப்பு) ஆகும்.

இறுதியாக ஜார் போல்ட் ஓஃப் லைட்னிங் (JAR Bolt of Lightning) என்ற வாசனை திரவியம் 765,000 அமெரிக்க டொலருக்கு (64.2 கோடி இந்திய மதிப்பு) விற்பனை செய்யப்படுகிறது.

கோடிகளில் விற்பனை செய்யப்படும் வாசனை திரவியங்கள் பற்றி தெரியுமா.... | World S 5 Most Expensive Perfumes Name List

இந்த வாசனை திரவியம், மலர்ச்சாறும், காரமான வாசனைகளும் கலந்த கலவையைக் கொண்டது என தெரியவந்துள்ளது.

இவ்வாறாக, ஒரு வாசனை திரவியம் என்பது ஒரு உணர்வூட்டும் அனுபவமாக மட்டுமல்லாமல், ஒரு பொருளாதாரச் சின்னமாகவே மாறியிருக்கிறது என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.