யாழில் தாதிப் பயிற்சி பெற்று வந்த யுவதி உயிர்மாய்ப்பு ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

யாழில் தாதிப் பயிற்சி பெற்று வந்த யுவதி உயிர்மாய்ப்பு ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் புத்தூர் – வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியைச் சேர்ந்த லோகவேந்தன் றுகிந்தா (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் தாதிப் பயிற்சி பெற்று வந்த யுவதி உயிர்மாய்ப்பு ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல் | Woman Undergoing Nursing Training Commits Jaffna

முழங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி புத்தூர் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் தாதியர் பயிற்சிநெறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.