
மற்றுமொரு சேவைக்கும் வற் வரியை அறிவித்த அரசாங்கம்
பல்வேறு சேவைகளை நிகழ்நிலை வழங்குவதன் மூலம் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மீது பெறுமதி சேர் வரி (VAT )விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது, அதன்படி, அத்தகைய சேவைகளை வழங்குதில் 18% மதிப்பு கூட்டப்பட்ட வரி விதிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், விதிக்கப்பட்ட புதிய வரியானது, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு சேவைகளை நிகழ்நிலையில் வழங்குவதன் மூலம் டொலர்களில் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மீது வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டு, அதில் மின்னணு தளம் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் அத்தகைய சேவைகளை வழங்கப்படும் சேவைகளுக்கு ஒக்டோபர் முதல் வற் வரி அறவிடப்படும் என அறிவித்துள்ளார்.