
தேர்தல் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இன்று (ஜூலை 7) முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக இடைநிறுத்தம், தற்போது நடைப்பெற்று வரும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், கீழ்க்காணும் எல்லா ஆன்லைன் சேவைகளும் மறு அறிவிப்பு வரை பயன்பாட்டில் இருக்காது:
• வாக்காளர் பதிவு விவரங்களை சரிபார்க்கும் வசதி
• ஆன்லைன் வழியாக வாக்காளராக பதிவு செய்யும் சேவை
• வாக்காளர் அறிக்கைகள் பெறும் வசதி
• மாவட்டங்களுக்கு இடையிலான கோரிக்கைகள்
தேர்தல் ஆணைக்குழு, நிலைமை சீரானதும் சேவைகள் மீளத் தொடங்கும் எனவும், அதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.