
நெல்லுக்கான உத்தரவாத விலை : அரசாங்கத்திடம் விவசாயிகள் விடுத்த கோரிக்கை
நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்குமாறு, விவசாயிகள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, உலர்த்தப்படாத நெல் ஒரு கிலோகிராமுக்கு 120 ரூபாவையும், உலர்த்தப்பட்ட ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 140 ரூபாவையும் உத்தரவாத விலையாக நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 102 ரூபாய் விலையானது, பாரிய ஆலை உரிமையாளர்களுக்கே பயனளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நடவடிக்கைகள் கடந்த மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பமானது.
இதன்படி, நாட்டரிசி நெல் 1 கிலோகிராம் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 1 கிலோகிராம் 125 ரூபாவிற்கும், கீரிசம்பா நெல் 1 கிலோகிராம் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.