கொழும்பு - யாழ்ப்பாணம் பயணிப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

கொழும்பு - யாழ்ப்பாணம் பயணிப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

 இன்று(07) முதல் கொழும்பு - யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவைநாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

கொழும்பு - யாழ்ப்பாணம் பயணிப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! | Good News Traveling Between Colombo Jaffna Train

இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.