நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய் ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய் ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

நாட்டில் இந்த ஆண்டு (2025) இதுவரை 24,180 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர்  பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய் ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை | Dengue Cases Rise Death Toll Continues To Clim

நாட்டில் டெங்கு பரவலில் விரைவான அதிகரிப்பு காணப்படவில்லை என்றாலும், இடைவிடாத மழையுடன் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களில் அதிகரிப்பு காரணமாக பதிவான நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.