வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞனின் சடலம் மீட்பு

இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் இன்று (04) வவுனியா (Vavuniya) - காத்தார் சின்னக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

செல்லத்துரை கோபிநாத் என்ற 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞனின் சடலம் மீட்பு | Dead Body Found In Vavuniya

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம் கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இளைஞர் நேற்று (03) மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞனின் சடலம் மீட்பு | Dead Body Found In Vavuniya

இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றப்பிரிவு காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.