
யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு
யாழில் (Jaffna) பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது.
நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் குழந்தைகள் இரண்டும் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த குழந்தை நேற்றிரவு (08) உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக குழந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.