இவரை தெரியுமா? பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு

இவரை தெரியுமா? பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், T-56 துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர்.

இதில் ஒருவர் காயமடைந்ததையடுத்து, சீதுவை பொலிஸார் ஆரம்பித்த விசாரணைகளின்படி, குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவரை தெரியுமா? பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு | Seeduwa Is A Suspect Wanted By The Policeசீதுவை பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

பெயர்: மொஹமட் அஸ்மன் ஷெரீப்டீன் விலாசம் : ரத்தொலுகம, கட்டுவன வீதி, ஹோமாகம சந்தேகநபரின் புகைப்படம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்:

சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591637 சீதுவை பொலிஸ் நிலையம்: 0112 253 522