யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகரில் பெண் ஒருவர் கிண்ற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பு கட்டுக்கள் இல்லாத கிணற்றில் நேற்றைய தினம் (4) நீராடிக்கொண்டிருந்த வேளை , கால் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து பெண் உயிரிழப்பு | Woman Dies Falling Into Well In Jaffna

இதனையடுத்து அவரை வீட்டார் மீட்டு ,வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 58 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.