அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் (Sri Lanka) அந்நிய செலாவணி கையிருப்பு 6.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஊடக சந்திப்பொன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 6. 5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Ncrease In Foreign Exchange Reserves

எதிர்வரும் வருடத்தில் இது 7 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் வெற்றிகரகமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட முடியும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.