பிரான்ஸில் யாழ் இளைஞன் விபரீத முடிவு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

பிரான்ஸில் யாழ் இளைஞன் விபரீத முடிவு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பிரான்ஸ் பரிஸ் Le Bourget ரயில் நிலையத்தில் இடம்பெற்றதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிரான்ஸில் யாழ் இளைஞன் விபரீத முடிவு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Jaffna Youth Dies In France Due To Suicideயாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த 24 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். பிரான்ஸில் வதிவிட உரிமை மறுக்கப்பட்டதால், இளைஞன் மனஉளைசலுக்குள்ளாகி இந்த விபரீத முடிவை எடுத்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பெரும்தொகை பணத்தை செலவு செய்து கனவுடன் வெளிநாடு சென்ற இளைஞர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பிரான்ஸ் வாழ் தமிழர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.