குடும்ப தகராறில் நிகழ்ந்த விபரீதம்; கணவன் தலைமறைவு!

குடும்ப தகராறில் நிகழ்ந்த விபரீதம்; கணவன் தலைமறைவு!

குடும்ப தகராறில் , மனைவியையும், மனைவியின் குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக   களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.  சம்பவத்தில்  சந்தேக நபரின் மனைவியும், மாமனாரும், மாமியாரும் மைத்துனியுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

குடும்ப தகராறில் நிகழ்ந்த விபரீதம்; கணவன் தலைமறைவு! | A Tragedy That Occurred During A Family Dispute

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்  தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.