யாழில் விளக்கமறியலில் உள்ள பெண் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழில் விளக்கமறியலில் உள்ள பெண் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாண விசேட குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸ் உத்தியோகஸ்தர் இலஞ்சம் கோரியதாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழில் விளக்கமறியலில் உள்ள பெண் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Woman Remand Jaffna Complaint Bribery Commissionயாழ்ப்பாணத்தில் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.