பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய் ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய் ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

 ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாயை பொலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சேர்ந்த பாலமுருகன், சிவசக்தி தம்பதிக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை நிலையில் சிவசக்திக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய் ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் | Mother Who Killed And Buried Baby Girl

தாயும், சேயும் நலமுடம் இருந்த நிலையில் ஏப்ரல் 20ம் திகதி குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் ரகசியமாக புதைத்துள்ளனர்.

பிறந்து 4 நாட்களான பச்சிளம் பெண் குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பிய நிலையில் ஒரே இரவில் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.

தகவலறிந்து  நடத்தப்பட்ட விசாரணையில் சிவசக்தி  ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என நினைத்த நிலையில் இரண்டாவதாகவும் பெண் குழந்தையே பிறந்ததால் அந்த ஆத்திரத்தில் குழந்தையை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து, பொலிஸார் வழக்குப்பதிந்து சிவசக்தியை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிவசக்தி வீட்டின் பின்புறம் குழந்தையை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். குழந்தையின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

பிறந்த 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.