யாழில் இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

யாழில் (Jaffna) மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சோக சம்பவம் நேற்று (23) யாழ். குடவத்தை - துன்னாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு | Young Family Man Dies In Jaffna

பிரதேச பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.