
கொழும்பில் சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் மரணிக்கவில்லை ; காவல்துறை தகவல்
கொழும்பில் சற்றுமுன்னர் சமூக ஆர்வலர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லக்சந்த சேவன வீட்டு வசதி வளாகத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
டேன் பிரியசாத் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், இரண்டு தோட்டாக்கள் மார்பிலும் இரண்டு தோட்டாக்கள் தோள்பட்டையில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இவர் இலங்கை பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.