
யாழ் . போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா வியாபாரம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுகாதார தொழிலாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (21) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை முன்றலில் கஞ்சா வியாபாரத்தில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நபரை கைது செய்த சோதனையிட்டனர்.
இதன் போது , அவரது உடைமையில் இருந்து 25 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.