
தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான(local government election) தபால்மூலமான வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தகவலின்படி உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாக்குச்சீட்டுக்கள் அனைத்தும் நேற்றையதினம்(19) தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட இருந்ததாக அரச அச்சக திணைக்கள பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.