வீடொன்றில் தீப்பரவல் - பெண் ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டிலிருந்த 67 வயதுடைய பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயில் சிக்கி குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.