யாழ். மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை ; வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் அவதானம்

யாழ். மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை ; வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் அவதானம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது தற்போதைய நாட்களில் எச்சரிக்கை மட்டத்துக்கு அதிகரித்து வருகின்றமையால் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N.சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போது, இதனைத் தெரிவித்தார்.

யாழ். மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை ; வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் அவதானம் | Warning Issued People Jaffna Caution Temperature

வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் வெப்பநிலையானது 34.2 பாகை செல்சியஸ்ஸாக பதிவாகியிருந்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N. சூரியராஜா தெரிவித்துள்ளார்.