யாழில் எறும்புக்கடியால் பலியான பச்சிளம் சிசு ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழில் எறும்புக்கடியால் பலியான பச்சிளம் சிசு ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது.

மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது.

யாழில் எறும்புக்கடியால் பலியான பச்சிளம் சிசு ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Infant Killed By An Ant Bite In Jaffna

குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை பெற்றோர் கவனிக்காமல்  இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று  (12) அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அங்கு சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனையில், எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.