யாழில் வன்முறைகளற்ற சுமுகமான தேர்தல்!

யாழில் வன்முறைகளற்ற சுமுகமான தேர்தல்!

யாழில் எந்தவித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் இன்றைய தேர்தல் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர் வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாண தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை இடம்பெற்று நிறைவடைந்துள்ளது. எந்தவித அசம்பாவிதமுமின்றி தேர்தலானது மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. இது வரை எந்தவித வன்முறைச் சம்பவமும் பதிவாகவில்லை அத்தோடு கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை அதிகளவான வாக்களிப்பு இடம் பெற்றுள்ளது அதாவது 67.72% வாக்களிப்பு பதிவாகி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.