
யாழில் டிப்பர் விபத்தில் மூதாட்டி பலி
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில், மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
82 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென பயணித்தபோது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன் அவர் மீது ஏறியுள்ளது.
இதனையடுத்து, அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிப்பர் சாரதி கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.