50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிசேகம்;பிரதமர் வரவால் கெடுபிடி ; பக்தர்கள் கவலை!

50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிசேகம்;பிரதமர் வரவால் கெடுபிடி ; பக்தர்கள் கவலை!

 வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் (11) காலை நடைபெற்றது.

50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிசேகம்;பிரதமர் வரவால் கெடுபிடி ; பக்தர்கள் கவலை! | Maviddapuram Kandaswamy Temple Jaffna

 மகா கும்பாபிசேகத்திற்கான பூர்வாங்க கிரியைகள் இன்று அதிகாலை 04.32 மணிக்கு ஆரம்பாமாகி தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள், விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிசேகம்;பிரதமர் வரவால் கெடுபிடி ; பக்தர்கள் கவலை! | Maviddapuram Kandaswamy Temple Jaffnaஇந்நிலையில் ஆலயத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியர் வருகை தரவுள்ளதாக தெரிவித்து, ஆலய சூழலில் பெருமளவான பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிபடையினர், குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை வேளையில் ஆலய வழிபாட்டிற்கு வருகை தந்த குருக்கள்மாரையும் பக்தர்களையும் கடுமையான உடற்சோதைனைக்கு உட்படுத்தியே ஆலய வளாகத்தினுள் அனுமதித்தனர்.

50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிசேகம்;பிரதமர் வரவால் கெடுபிடி ; பக்தர்கள் கவலை! | Maviddapuram Kandaswamy Temple Jaffna

கும்பாபிஷேக பெருவிழாவிற்கு வருகை தந்த தம்மை இவ்வாறு இன்னல் படுத்துவதற்கு பலரும் விசனங்களை தெரிவித்தனர்.

அத்துடன் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் சாப்பாத்துக்களுடன் நடமாடுவதாகவும் , 50 வருட காலத்தின் பின்னர் இடம்பெறும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேக பெருவிழாவில் படையினரின் அத்துமீறல்கள் வேதனையளிப்பதாக பகதர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிசேகம்;பிரதமர் வரவால் கெடுபிடி ; பக்தர்கள் கவலை! | Maviddapuram Kandaswamy Temple Jaffna