யாழில் காவல்துறையிடம் சிக்கிய 19 வயது இளைஞன்

யாழில் காவல்துறையிடம் சிக்கிய 19 வயது இளைஞன்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த போதைபொருளுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து நேற்றிரவு (10.04.2025) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதான 19 வயதான குறித்த சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த போதைபொருளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் காவல்துறையிடம் சிக்கிய 19 வயது இளைஞன் | 19 Year Old Youth Caught By Police In Jaffna

அத்துடன், மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.