நல்லூரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம்: வீட்டு மதிலோடு மோதி விபத்து

நல்லூரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம்: வீட்டு மதிலோடு மோதி விபத்து

யாழ் நல்லூர் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலோடு மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து இன்று(09.04.2025)  காலை இடம்பெற்றுள்ளது.

நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தின் போது, டிப்பர் வாகனம் சரிந்த நிலையில் வாகனத்தில் காணப்பட்ட மணலும் குறித்த வீதியில் கொட்டுண்டது.

இதனால் சிறிது நேரம் அவ் வீதியுடனான போக்குவரத்துக்கு தடையேற்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.