நாடு முழுவதும் 55 வீதமான வாக்குப்பதிவுகள் நிறைவு – இரத்தினபுரியில் அதிகளவிலான வாக்குப்பதிவு!

நாடு முழுவதும் 55 வீதமான வாக்குப்பதிவுகள் நிறைவு – இரத்தினபுரியில் அதிகளவிலான வாக்குப்பதிவு!

நாடு முழுவதும் மதியம் 04 மணி வரையான காலப்பகுதியில் 55 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் தற்போது அதிக வாக்குப்பதிவுகள் பதிவான இடமாக இரத்தினபுரி காணப்படுவதாகவும் அங்கு இதுவரை 70% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறைந்தளவிலான வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற மாவட்டமாக பொலன்னறுவை மாவட்டம் காணப்படுகின்றது. அங்கு இதுவரை 55% வாக்குப்பதிவுகளே இடமபெற்றுள்ளன.

அத்தோடு திருகோணமலை 69%, மாத்தளை 68%, கேகாலை 67%, கண்டி 65%, மொனராகலை 65%, கமபஹா 62%, கொழும்பு 60%, களுத்துறை 60%, காலி 60%, புத்தளம் 60%, யாழ்ப்பாணம் 57% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.