
யாழில் அதிவேகத்தால் பறிபோன உயிர்
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார். அதி வேகமாகச் சென்றதன் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.