யாழ் மாவட்டத்தின் 2 மணி வரையான தொகுதிகளின் வாக்குவீதங்கள் இதோ!
நாடாளுமன்றத் தேர்தலுக்க்கான வாக்கெடுப்புகல் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தொகுதிகளின் வாக்களிப்பு வீதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அந்த வகையில், ஊர்காவற்றுறைத் தொகுதியில் 61.40%, வட்டுக்கோட்டையில் 55.12%, காங்கேசன்துறையில் 38.33%, மானிப்பாயில் 56.86%, கோப்பாயில் 52.38%, உடுப்பிட்டியில் 49.11%, பருத்தித்துறையில் 56.38%, சாவகச்சேரியில் 53.84%, நல்லூரில் 59.28%, யாழ்ப்பாணத் தொகுதியில் 61.34% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது.