
யாழில் பல பெண்களை ஏமாற்றிய லண்டன் வாழ் தமிழரின் திருவிளையாடல் அம்பலம்!
யாழில் பல பெண்களை ஏமாற்றிய புலம்பெயர் தமிழரின் ஒருவர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த புலம் பெயர் தமிழர் லண்டனிலிருந்து தாயகம் வந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, புத்தளம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் பல பெண்களை ஏமாற்றி திருமண செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
தன்னால் லண்டனுக்கு பெண்களை கொண்டு செல்ல முடியும் என கூறி ஏமாந்த பெண்களுடன் உறவு வைத்தும் சில பெண்களை போலியாக திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது அந்த பெண்களின் நகைகள், மற்றும் பணங்களையும் ஏமாற்றிப் பெற்று பின்னர் குறித்த நபர் தலைமறைவாகிவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த புலம்பெயர் லண்டனில் இவ்வாறான செயற்பாடுகள் செய்து சிறைக்கு போய் வந்தவர் என்றும் , எனவே அவர் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் பிரதேச சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.