பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு

பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு

தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்றுவரும் நிலையில் மதியம் 1 மணி வரையான தேர்தல் வன்முறை குறித்த அறிவிப்பினை தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இதில் அதிகளவாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 18 மீறல்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக 10 முறைப்பாடுகளும் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக 06 தேர்தல் மீறல்கள் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், கேகாலை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தேர்தல் தொடர்பான மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பாக 16 தேர்தல் மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.