தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 266,598 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாக 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 9 பேர் கட்டாரில் இருந்தும் 3 பேர் குவைத்தில் இருந்தும் 22 பேர் மஹாரஷ்டிராவில் இருந்தும் ஒருவர் ஹரியானாவில் இருந்தும் 7 பேர் டெல்லியில் இருந்தும் வந்தவர்களும் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, புதிதாக 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.