காலை 7 மணி முதல் இடம்பெற்று வரும் வாக்குப் பதிவுகள்..!

காலை 7 மணி முதல் இடம்பெற்று வரும் வாக்குப் பதிவுகள்..!

2020 பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் 35 சதவீதமும், வன்னி மாவட்டதில் 24 சதவீதமும் திருகோணமலையில் 30 சதவீதமும், களுத்துறையில் 40 சதவீதமும், மாத்தளை மாவட்டத்தில் 46 சதவீதமும், மாத்தறை மாவட்டத்தில் 22 சதவீதமும், கேகாலையில் 25 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.

அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் 27 சதவீதமும், இரத்தினபுரி மாவட்டத்தில் 24 சதவீதமும், காலி மாவட்டத்தில் 20 சதவீத வாக்குப்பதிவும் புத்தளம் மாவட்டத்தில் 16 சதவீதமும் நுவரெலியா மாவட்டத்தில் 25 வீதமும், கண்டி மாவட்டத்தில் 25 வீதமும் பதுளையில் 25 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் அம்பாந்தோட்டையில் 24 சதவீதமும், திகாமடுல்லை மாவட்டத்தில் 20 சதவீத வாக்குப்பதிவும், பொலனறுவையில் 21 சதவீதமும், குருநாகலை மாவட்டத்தில் 25 சதவீதமும், கம்பஹா மாவட்டத்தில் 18 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இதுவரையில் 35 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.