
ஒரு தரப்பு அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து : வெளியான அறிவிப்பு
அரசாங்க அச்சக அலுவலகத்தின் (Department of Government Printing) அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இன்று (24) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்படும் என்று அரசாங்க அச்சக அதிகாரி பிரதீப் புஷ்பகுமார (Pradeep Pushpakumara) தெரிவித்துள்ளார்.
அரசாங்க அச்சக அலுவலகத்தில் மொத்தமாக ஏறத்தாழ 1,100 ஊழியர்கள் பணிபுரிவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும் குறித்த அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக அரசு அச்சக அலுவலகத்திற்கு வெளியே காவல்துறை சிறப்புப் படை நடமாடும் ரோந்துகள் செயற்பாட்டில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நேற்று (23) ஆரம்பமான நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது 03 மாவட்டங்கள் தொடர்பான ஆவணங்களை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக பிரதீப் புஷ்பகுமார தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.