பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள விடயம்....!

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள விடயம்....!

எந்தவித அச்சமும் இன்றி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 நோய்த்தொற்று குறித்து எந்த அச்சமும் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 2011 ஆம் அண்டிற்கு பின்னர் மகிந்த தேசப்ரிய இன்று தமது வாக்கினை பதிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றில் அவர் தனது வாக்கினை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.