திருகோணமலையில் வாக்களித்தார் சம்பந்தன்

திருகோணமலையில் வாக்களித்தார் சம்பந்தன்

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்றுவருகின்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று மதியம் 11.30 மணிக்கு திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிக்களித்தார்.

திருகோணமலையில் இன்று காலை 10 மணிவரையான காலப்பகுதியில் 30 வீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்டத்தின் பிரதான வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே தனது வாக்கினை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் காலை 7.00 மணியளவில் வாக்களித்தார்.