வடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

வடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதில் இருந்து பரவலாக வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நண்பகல் 12 மணிவரை 37 சதவீத வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் நண்பகல் 12 மணிவரை 40 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாகவும் அம்மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவில் காலை 11 மணிவரையான காலப்பகுதியில் 27% வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.