சந்தேகநபர் கைதான பின்னரும் தொடரும் போராட்டம்

சந்தேகநபர் கைதான பின்னரும் தொடரும் போராட்டம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம், நாளை (13.03.2025) காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுகத் சுகததாச இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் கருத்து வௌியிட்ட அவர் "இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். குறித்த வேலைநிறுத்தம் நாளை காலை 8 மணிக்கு முடிவடையும். இது போன்ற விடயங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதியாக உள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பாக இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்."