பாடசாலை விடுமுறை: நடைமுறையாகப்போகும் புதிய தொடர்ந்து சேவை

பாடசாலை விடுமுறை: நடைமுறையாகப்போகும் புதிய தொடர்ந்து சேவை

வரவிருக்கும் பாடசாலை விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு தொடருந்து சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடருந்து திணைக்களத்தின் பொது மேலாளர் ஜே.ஐ. டி. ஜெயசுந்தர இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2025 மார்ச் மாத பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்தையும் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு தொடருந்து சேவை இயக்கப்படும்.

இந்த நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கா.பொ.த.சாதாரண தர பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலை விடுமுறை: நடைமுறையாகப்போகும் புதிய தொடர்ந்து சேவை | Special Trains For The Upcoming School Holidays

இதேவேளை, குறித்த பரீட்சையானது 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 3,663 மையங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.