வீதியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை : ஆதரவளித்த பொலிஸார்

வீதியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை : ஆதரவளித்த பொலிஸார்

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று  இன்று  (10) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை : ஆதரவளித்த பொலிஸார் | Abandoned Baby On The Streetதேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று இருப்பதாக அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தைதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு, உடனடியாக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தை நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.