யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவருக்கு நேர்ந்த துயரம்

யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றையதினம் அவரது வீட்டில் இருந்த கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவருக்கு நேர்ந்த துயரம் | Family Member Dies After Drinking Calcium Jaffna

இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.