
சஞ்சீவ கொலையில் தொடர்புடைய துப்பாக்கிதாரியின் காதலி கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியின் காதலி எனக் கூறப்படும் பெண் ஒருவர் மஹரகம காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பமுனுவவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மஹரகம காவல்துறையிடம் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட பெண் மேலதிக விசாரணைக்காகக் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.