இந்த மூன்று பேரின் பேட்டிங் மிகவும் பிடிக்கும்: நடுவர் இயன் குட் சொல்கிறார்

இந்த மூன்று பேரின் பேட்டிங் மிகவும் பிடிக்கும்: நடுவர் இயன் குட் சொல்கிறார்

ஜேக் கல்லீஸ், சச்சின் தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் பேட்டிங்கை ரசித்து பார்ப்பேன் என்று கிரிக்கெட் நடுவர் இயன் குட் தெரிவித்துள்ளார். இந்த மூன்று பேரின் பேட்டிங் மிகவும் பிடிக்கும்: நடுவர் இயன் குட் சொல்கிறார் இயன் குட் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் நடுவர் இயன் குட். ஐ.சி.சி.யின் நடுவராக பணியாற்றிய இவர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் பார்த்த வகையில் ஜேக் கல்லீஸ் (தென் ஆப்பிரிக்கா) சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), விராட் கோலி (விராட் கோலி) ஆகிய 3 பேர் தான் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஜேக் கல்லீசின் பேட்டிங்கை பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அவர் மிக மிக சிறந்த வீரர் ஆவார். தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரும் அபாரமாக ஆடுபவர்கள். எனவே இந்த மூன்று பேரின் பேட்டிங் எனக்கு பிடித்தமான ஒன்றாகும். விராட் கோலி, சச்சின் தெண்டுல்கர் விராட் கோலி ஒரு வேடிக்கையான மனிதர். அவர் என்னைபோல் ஓரிரு முறை பேட்டிங் செய்திருக்கிறார். அவர் ஒரு கவர்ச்சிகரமானவர். தெண்டுல்கரின் பேட்டிங் சாயல் அவரிடம் இருக்கிறது. தெண்டுல்கரை போலவே அவருக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். கல்லீஸ் ரிக்கி பாண்டிங்கின் (ஆஸ்திரேலியா) மிகச்சிறந்த பேட்டிங்கை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் அருமையான வீரர். மிகச்சிறந்த கேப்டன். ஆஸ்திரேலியாவுக்கு அவர் பெருமைச் சேர்த்துள்ளார்.

இவ்வாறு இயன் குட் கூறி யுள்ளார். இயன்குட் 74 டெஸ்ட், 170 ஒருநாள் போட்டி மற்றும் 37 இருபது ஓவர் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இவரது நடுவர் பணி அனைவராலும் பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாக இருந்துள்ளது. இவர் இங்கிலாந்து அணிக்காக 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நடுவர் பணிக்கு வந்தார். கடந்த ஆண்டு நடுவர் பொறுப்பிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றார்.