வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் இன்று சீரற்ற வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் குளிரான வானிலை எதிர்பார்க்கப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Today S Weather Forecast

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.