![](https://yarlosai.com/storage/app/news/793dcd43d3a0de66b40799f0d8cbe7de.jpeg)
தொழிலதிபர்களுக்கு பிணையில்லாத கடன் : அரசு வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தொழிலதிபர்களுக்கு பிணையில்லாத கடன்களைப் பெறுவதற்கான ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கான திட்டமும் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டவும், தற்போதுள்ள கடனில் ஒரு பகுதியையாவது அடைக்கவும் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் பங்கேற்றதுடன், தொழில்துறையினருக்கு வழங்கக்கூடிய சலுகைத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பது அவசியம் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.